Times of Puducherry
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், புதுச்சேரியில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை அக்டோபர் 2-வது வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். உப்பனாறு, கருவடிக்குப்பம், கோரிமேடு உள்ளிட்ட முக்கிய கால்வாய்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்து, மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நீர்வழித்தடங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.