Times of Puducherry
அசாமில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் புது வரவாக வந்த ஐந்து வயது பெண் யானை துர்கா வந்து சேர்ந்தது. அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த யானை மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டிமீனாட்சி அம்மன்
கோவிலுக்கு வந்த துர்கா யானைக்கு, கோவில் பணியாளர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய யானை வருகையால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி தமிழ்நாட்டு வனத்துறையின் உரிய தடையின்மைச் சான்று மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த யானை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மதுரை அருள்மிகு
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்குடமுழுக்குநடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாது காப்புபணிகள் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளைக் காணவும் தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இத்திருக்கோயில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிச் செப்டம்பர் 11ஆம் தேதி காலை வரை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, கோயில் வடக்காடி வீதியில் பிரம்மாண்டமாக
அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதற்கால யாக பூஜை வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. அங்கு 108 மூலிகைகளால் ஹோமம் வளர்க்கப்பட்டு, 400 சிவாச்சாரியார்கள் மந்திரங்களை முழங்கவழிபாடு நடத்தினர். முடிவில் மகா தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி 4 ஆடி வீதிகளிலும் 5க்கும் மேற்பட்ட
தீயணைப்புவாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கோயில் மற்றும் மாசி வீதிகளைச் சுற்றிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தீவிரப்
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, ராஜா பட்டர் மற்றும் ஸ்தானீக பட்டர்கள்
தலைமையில் சிவாச்சாரியார்கள், ஒதுவார்கள், கோயில்
பணியாளர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.