Times of Puducherry

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 12:58 PM

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இன்று முதல் சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழா வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி மிக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது அதன் பொருட்டு தெற்கு இரயில்வே சார்பாக மெயின் லைன் மயிலாடுதுறை சந்திப்பு வழியாக சிறப்பு ரெயில் இயக்கபட உள்ளது. வண்டி எண் 06161 சென்னை கடற்கரை – மானாமதுரை சந்திப்பு சிறப்பு ரெயில் வருகின்ற இன்று முதல் சென்னை கடற்கரையில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர்,தாம்பரம்,விழுப்புரம், மயிலாடுதுறை, மெயின் லைன் வழியாக மதுரைக்கு அன்று இரவு 10.05 மணிக்கும் மானாமதுரைக்கு இரவு 23.30 மணிக்கு சென்று சேரும். மறு மார்க்கமாக மானாமதுரை சந்திப்பு நிலையத்தில் இருந்து செப்டெம்பர் 17 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு புறப்பட்டு மதுரை சந்திப்பு நிலையத்திற்கு 12.50 மணிக்கு வரும். மதுரை சந்திப்பு நிலையத்தில் இருந்து மதியம் 1.00 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி மயிலாடுதுறை,விழுப்புரம்,தாம்பரம், எழும்பூர் வழியாக அன்று இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை நிலையம் சென்று சேரும், மயிலாடுதுறை சந்திப்புக்கு 5.23 மணிக்கு வந்து 5.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையில் கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை சுற்றி வட்டார மக்கள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழா செல்லும் ஆன்மீக அன்பர்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top