Times of Puducherry
வருகின்ற 17ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடக்கிறது இன்று மதுரையில் காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இன்று மதுரைக்கு வருகை தந்தார் அவருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், வரவேற்றார் பின்பு காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
17.09.2026 அன்று நடைபெற உள்ள மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது . மேலும், மதுரை மாநகர காவல்துறையின் பல்வேறு காவல் பணிகள் மற்றும் நடை ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.