Times of Puducherry
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு
நாய்களுக்கு உரிமம் வழங்குவதற்கான முகாம் அசோக் நகர்
ன் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இந்த முகாமில்
50-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற
விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து உழவர்கரை
நகராட்சி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா
நகர் பூங்காவில் வருகிற 19-ந் தேதி காலை 9 மணி முதல்
மாலை 3 மணி வரை நடக்கிறது.
உரிமம் பெற வருபவர்கள் தங்களது புகைப்படம் மற்றும்
ஆதார் புகைப்படம், செல்லப்பிராணிக்கு செலுத்திய தடுப்
பூசி ஆவணம் மற்றும் செல்லப்பிராணியின் புகைப்படம்
ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். வருகிற 31-ந்தேதிக்
குள் அனைத்து செல்லப்பிராணி உரிமையாளர்களும் தங்க
ளது வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்
டும். அவ்வாறு உரிமம் பெற தவறும் செல்லப்பிராணி உரி
மையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்
என உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு
தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.