Times of Puducherry
பிரதமர் மோடியின் பிறந்த நாளான வருகின்ற 17-ம் தேதி பிரதமர் மோடி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என வலியுறுத்தும் வகையில் அனைவரும் இல்லத்தில் ஆசிர்வாத தீபம் ஏற்ற வேண்டும் என பிஜேபி மாநில தலைவர் ராமலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ராமலிங்கம், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை ஒரு மாத கால அளவிற்கு பிரதமரின் பிறந்தநாள் விழாவை சேவை மாதமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மக்களுக்கு சேவை செய்வதையே ஒரே குறிக்கோளாக கொண்டு தவப்புதல்வனாக பிரதமர் மோடி வாழ்ந்து வருவதாக பெருமிதமாக குறிப்பிட்ட ராமலிங்கம் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து உலக அளவில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது காந்தி பிறந்த நாடுதான் இந்தியா என்ற பெருமை ஒருபுறம் இருந்தாலும் நரேந்திர மோடியின் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா என்ற பெருமை தங்களுக்கு உள்ளதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் திறமையை பாராட்டி 37 நாடுகள் உடைய மிக உயரிய விருதுகள் நமது பிரதமருக்கு கிடைத்துள்ளது இது நமக்கெல்லாம் வாய்த்த பெருமை என்று தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு முதல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு அவர் செய்த சாதனைகளை விளக்கும் வகையில் இந்த விழா அமைந்திருக்கும் என்று குறிப்பிட்ட அவர் கொரோனா காலத்தில் உலகமே எதிர்பாராத அளவில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. உலக நாடுகளுக்கெல்லாம் இந்தியா தடுப்பு ஊசி கொடுத்து உதவியது இதெல்லாம் பிரதிபலிக்கும் வகையில் இந்த விழா அமையும் என்று தெரிவித்தார். கொரோனா காலத்தில் கம்போடியா போன்ற நாடுகளில் கோரைக்கிழங்கை அவித்து சாப்பிட்டு பசியை போக்கிய தருணங்களில் கூட இந்தியாவில் அரிசி கையிருப்பு இருந்தது நாட்டு மக்களுக்காக நரேந்திர மோடி வழங்கினார் பிரதமர் மோடி இதுவரை செய்த நலத்திட்டங்களுக்கும் இனிமேல் செய்ய இருக்கும் நலத்திட்டங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் நீடூழி வாழ வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்தும் விதமாக வருகின்ற சட்டமன்ற 17ஆம் தேதி 5 மணியிலிருந்து 7 மணி வரை அனைவரின் வீடுகளிலும் ஆசிர்வாத தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ராமலிங்கம் இதனை யோட்டி ஈஸ்வரன் கோவிலில் தீபம் ஏற்றும் விழாவில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர் மத்திய அரசு நிதி உதவியுடன் வில்லியனூர் பெரிய கோவில் காசி விசுவநாதர் ஆலயம் பாகூர் மூலநாதர் கோவில் சஞ்சீவி நகர் வாட்டர் டேங்க் நல்லவாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள நலத்திட்டங்களை பற்றி பட்டியலிட்ட ராமலிங்கம் பிரதமருக்கு எவ்வாறு ஆசிர்வாதம் தீபம் ஏற்றிட வேண்டுமென்ற விளக்கத்தையும் வெளியிட்டார்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.