Times of Puducherry

eKYC பதிவு சிறப்பு முகாம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 9:14 PM
kyc

நியாவிலைகடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு கைரேகை பதிவு செய்வதற்கு 19.09.2026 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது
மாவட்ட ஆட்சித்தலைவர்.சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை கைரேகை பதிவு மேற்கொள்ளாத முன்னுரிமை (PHH மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முன்னுரிமையற்ற (NPHH) குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 19.09.2026 (சனிக்கிழமை) அன்று அனைத்து நியாயவிலைக்கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி கைரேகை (eKYC) பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கைரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் வெளியூரிலோ அல்லது வெளி மாநிலத்திலோ வசித்து வந்தாலும், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக்கடைகளில் தங்களது eKYC கைரேகை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top