Times of Puducherry
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், சினிமா இயக்குனருமான கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் தள போஸ்ட் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அவரது பதிவுவை வைத்து பலரும் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
2013-ம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக கிருத்திகா உதயநிதி அடுத்து, விஜய் ஆண்டனியுடன் காளி, கடந்த ஆண்டு ஜெயம்ரவியுடன் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களை இயக்கியிருந்தார். ஓ.டி.டி தளத்திற்காக பாக்கெட் நாவல் என்ற வெப் தொடரையும் இயக்கினார். தற்போது தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
பெரிய அரசியல் குடும்பத்தின் மருமகளான கிருத்திகா உதயநிதி தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இல்லை என்றாலும், இவர் அவ்வப்போது வெளியிடும் சில பதிவுகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லாம். தமிழகத்தில் தற்போது அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
What is the procedure to contact an alien spaceship and get beamed out of this planet?
— kiruthiga udhayanidh (@astrokiru) September 12, 2026
குறிப்பாக கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த தவெக – திமுக இடையே அரசியல் மோதல் உச்சம் தொட்டுள்ளது. சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து முதல்வர் விஜய் செய்த சைகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இவர்களின் ஆபாச பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
Start reading murasoli. You will get there.
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) September 12, 2026
இந்நிலையில், கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஒரு வேற்றுக்கிரக விண்கலத்தைத் தொடர்புகொண்டு, இந்தக் கிரகத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கான வழிமுறை என்ன? என்று கேள்வி எழுப்பி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் திமுகவை விமர்சித்து கடுமையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அரசியல் விமர்சகரான கிஷோர் கே சாமி தனது பதிவில், முரசொலியை படிக்க தொடங்கினால் உங்களுக்கு வழி கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
Running away to space because your family business in politics is finally shutting down?
— George (@georgeviews) September 12, 2026
மேலும் பலரும் திமுக குறித்து விமர்சனங்களை வைத்து கமெண்ட் செய்து வரும் நிலையில், இந்த பதிவு தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.