Times of Puducherry
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து, தகுந்த சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.தற்போது சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார் மற்றும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.