Times of Puducherry
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது எல் நினோ வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் கொடுமையை
சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இருப்பினும் மாவட்டத்தில் ஆங்காங்கே அவ்வப்போது பரவலாக மழையும் பெய்து வருகிறது. பொம்பலூர் மாவட்டத்தில் மேற்கு அரணாகவும், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய அங்கமாகவும் விளங்குவது பச்சைமலை, இந்த மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து
வருகிறது. இந்தநிலையில், பச்சை மலையில் உள்ள ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி பகுதியில் திடீரென்று நீர் (மேகவெடிப்பு) விழுந்தது. இதனால் அப்பகுதியில் மிக குறுகிய காலத்தில் அளவுக்கு அதிகமான கனமழை கொட்டித் தீர்த்தது. மலைப்பகுதியில் பெய்த
இந்த ராட்சத மழையால், சேறும் சகதியுமாக மாறி மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் நாலாபுறமும் கரைபுரண்டு ஓடியது. இந்த பெருவெள்ளமானது அடைக்கம்பட்டி பெரிய ஏரிக்கும், சின்ன ஏரிக்கும் செல்லும் வரத்து வாய்க்கால்கள் வழியாக சீறிப் பாய்ந்தது. இதனால் மலையடிவார பகுதிக்கு சென்ற பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஊருக்கு திரும்ப முடியாமல் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த வெள்ளத்தால் அடைக்கம்பட்டி சின்ன ஏரி குறுகிய நேரத்திலேயே முழுமையாக நிரம்பியது. அதேபோல், பெரிய ஏரிக்கும்
தீர்வரத்து அதிகமாக உள்ளதால் அதுவும் வேகமாக நிரம்பி வருகிறது. திடீரென ஏற்பட்ட இந்தவெள்ளப்பெருக்கால் அப்பகுதி மக்கள் கடும்
அச்சமடைந்தனர். இருப்பினும் நீர் வரத்து வாய்க்காலில் கரைபுரண்டு சென்ற வெள்ளநீரை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து
வேடிக்கை பார்த்தனர்.
நீர் இடி விழுந்த பகுதியின் அருகே அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்த்த விவசாயி விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான
விவசாய வயல் உள்ளது. வெள்ளப்பெருக்கு திடீரென ஏற்பட்டதால், அவரது வயலில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த சுமார்
300 கிலோ சிள்ள வெங்காய மூட்டைகளை வெள்ளநீர் சுருட்டிக்கொண்டு அடித்துச்சென்றது. பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மாவட்ட நிர்வாகம் உரிய கள ஆய்வு செய்து தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாலிகள் மற்றும் பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, வரத்து வாய்க்காலில் காட்டாற்று வெள்ளம் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தபோது, அந்த
வழியாக எந்த நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வாய்க்காலை கடக்க முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அவரையும், மோட்டார் சைக்கிளையும் வெள்ளம் அடித்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள்,உடனடியாகச்செயல்பட்டு கயிறு கட்டி, வெள்ளத்தில் தத்தளித்த அந்த நபரையையும், அவரது மோட்டார் சைக்கிளையும் போராடி மீட்டனர். பொதுமக்களின் சமயோசித செய்லால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.