Times of Puducherry
விருத்தாசலம் அரசு பெண்கள் மாதிரி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை நகர மன்ற தலைவி சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதனை விரிவாக்கப்பட்டு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று வழங்கப்படுகிறது அதனை முன்னிட்டு விருத்தாசலம் அரசு பெண்கள் மாதிரி பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை விருத்தாசலம் நகரமன்ற தலைவி சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.