Times of Puducherry
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் 25.09.2026 வெள்ளிக்கிழமை அன்று சுவாமி சகஜானந்தா அரசு தொழிற்பயிற்சி நிலையம், சீர்காழி மெயின்ரோடு, (நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்) சிதம்பரத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறவுள்ளது. இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு (SSLC), பன்னிரண்டாம் வகுப்பு (HSC), ஐடிஐ (ITI), டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு (Degree) படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.