Times of Puducherry

இடதுசாரி அணி வேட்பாளர் தோழர் அ.மு.சலீம் இன்று வேட்புமனு தாக்கல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 3:16 PM

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில், இடதுசாரி அணியின் (சிபிஐ) வேட்பாளராகக் களம் காணும் அ.மு. சலீம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று அ.மு. சலீம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக, இன்று புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கொக்கு பார்க் அருகிலிருந்து பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான தோழர் ஆனி ராஜா பங்கேற்று சிறப்பித்தார்.மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐஎம்) மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜாங்கம் உள்ளிட்ட தலைவர்கள், கட்சித் தோழர்கள், ஜனநாயக முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்தப் பேரணியில் திரளாகப் பங்கேற்றுனர்.

.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top