Times of Puducherry

விநாயகர் சிலையின் தலையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
20 Sep 2026 • 7:41 PM
idol damage

புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட அருமாத்தபுரம் வசந்தம் நகர் பகுதியில், குடியிருப்பு வாசிகள் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கடந்த 5 நாட்களாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று இரவு நடைபெற்ற வழிபாட்டில் வழக்கறிஞரும், டிவிகே பிரமுகருமான சசிபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

இந்த நிலையில், மர்ம நபர்கள் விநாயகர் சிலையின் தலையை உடைத்ததுடன், சிலையின் மற்ற பகுதிகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. காலையில் இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

.https://timesofpuducherry.com/vinayagar idol damage

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top