Times of Puducherry
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை ஒட்டி இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை தூய்மை பணி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடற்கரை தூய்மை பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான், இந்திய கடலோர காவல் படை இயக்குனர் தசீலா, செயலர் ஸ்மிதா, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் தூய்மை பணியில் கலந்து கொண்டனர். கடலோர காவல் படையின் செயல்பாடுகள் குறித்த புகைப்படங்களை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார். கடலோர காவல் படையின் செயல்பாடுகள் குறித்த புகைப்படங்களை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.