Times of Puducherry

இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல குழுக் கூட்டம்: தொடங்கி வைத்த ஆளுநர்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:41 AM
governor speech

இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல குழுக் கூட்டம் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் திரு K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் திரு ரவிச்சந்திரன் துணைத் தலைவர் திரு கிருஷ்ண போதனப்பு, புதுச்சேரி கிளையின் தலைவர் திரு நடராஜன், தலைமைச் செயலர் திரு சரத் சவுகான், தொழில்துறை செயலர் திரு விக்ராந்த் ராஜா மற்றும் ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த தொழில்துறை தலைவர்கள், தொழில்முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தொழில் முனைவோருக்கான வழிகாட்டு கையேட்டினை துணைநிலை ஆளுநர் வெளியிட்டார். கூட்டத்தில், துணைநிலை ஆளுநர் முன்னிலையில், புதுச்சேரி திறன் மேம்பாட்டு மையம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இடையில், 125 இளைஞர்களுக்கு ஓர் ஆண்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top