Times of Puducherry
சேவை உறுதிமொழி இயக்கத்தின்கீழ் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழக த்தில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “உங்கள் பிரதமரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரையாடினார்.
மேலும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிரகாஷ் பாபு, பதிவாளர் டாக்டர் குணசேகரன், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.முன்னதாக, தாயின் பெயரில் ஒரு மரம் திட்டத்தின்கீழ் துணைநிலை ஆளுநர் மரக்கன்று நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து விக்சித் பாரத் கண்காட்சியை பார்வையிட்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.