Times of Puducherry
கோரிமேடு E .S .I மருத்துவமனையை மாடல் மருத்துவமனையாக மாற்ற வேண்டும்!நோயாளிகளை JIPMER மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு AIUTUC கண்டனம்!
ஏ ஐ யூ டி யூசி தலைவர் சங்கரன் செயலாளர் சிவகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ESIC திட்டத்தில் இணைந்து மாதா மாதம் பணம் செலுத்தி வருகின்றனர். ஒரு லட்சம் உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர்களின் சம்பளத்தில் பணம் செலுத்தி வரும் நிலையில் அவர்களுக்கான சிகிச்சைகளுக்கு வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர் இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மத்திய அரசு கோரிமேட்டில் உள்ள ESIC மருத்துவமனையை முன்மாதிரி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். அதற்காக மாநில அரசிடம் முழு இடத்தையும் கோரியதால் மாநில அரசு முழு இடத்தையும் அளித்து விட்டது. ஆனால், ESI கழகம் மருத்துவமனையை முன்மாதிரி மருத்துவமனையாக மாற்றாமல் நோயாளிகளை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்புவதை AIUTUC தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
ESIC – ன் இந்த நடவடிக்கை தொழிலாளர்களை, காப்பீட்டாளர்களை ஏமாற்றுவதாகும். நோயாளிகளை அலைக்கழிப்பது தவறானதாகும் . எனவே, மாதா மாதம் ESIC – க்கு பணம் செலுத்தி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உயர் ரக சிகிச்சை உட்பட அனைத்தும் கிடைத்திட கோரிமேடு ESIC மருத்துவமனையை முன்மாதிரி மருத்துவமனையாக மாற்றிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று AIUTUC தொழிற்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.