Times of Puducherry

த.வெ.க ஆட்சியின் மூலதனம் என்பது ரீல்ஸ் தான் - இ.பி.எஸ்.

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 11:33 PM
eps

சேலத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். பிறந்த குழந்தையை கூட ஏமாற்றும் அளவுக்கு ஆகிவிட்டார்கள். இந்த த.வெ.க ஆட்சியின் மூலதனம் என்பது ரீல்ஸ்.. ரீல்ஸ்.. தான். தம்பி ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவில் இருந்தார்; அடுத்தது விசிகவிற்கு சென்றார். அதற்கு பிறகு என்னை சந்தித்து அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார் . தம்பி, அதிமுக கட்சியில் பதவி விற்பது கிடையாது; உழைப்பவர்களுக்குதான் பதவி கிடைக்கும் என்று சொன்னேன்.

அதற்கு பிறகு தவெகவிற்கு சென்று அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துவிட்டார். கரூர் சம்பவத்தின்போது தவெக கட்சி அலுவலகத்தை 15 நாட்கள் மூடிவிட்டார்கள்; எல்லோரும் ஓடிவிட்டார்கள். வீர வசனம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வெளிமாநிலத்திற்கு சென்று தங்கிவிட்டார்; அப்படியாக வீரமிக்கவர்கள்தான் தவெகவில் இருக்கிறார்கள் என்றார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top