Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான இன்று என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது நேற்று புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் வசந்தி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்தி குமாரி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இறுதி நாளான இன்று என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக் ஆனந்த், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் பேரணியாக சென்று மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து ஜெகத்ரட்சகன் எம்பி மற்றும் திமுக மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த திமுக வேட்பாளர் சேது செல்வம், மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விநாயகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சலீம் ஆகிய நான்கு பேரும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.