Times of Puducherry

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டார்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 6:52 PM
election contestants list

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 15 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற பரிசீலனையில் 11 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று செப்டம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டார்

தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டார். அதன்படி, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top