Times of Puducherry
முதலவர் ரங்கசாமியை வளர்த்த தொகுதி தட்டாஞ்சாவடி. புதுச்சேரி மக்களுக்கு ஏதும் செய்யாமல், வளர்ச்சியை கொண்டு வராமல் முதியோர் பென்சன், அரிசி தருவதாகக் கூறி ஏமாற்றி அரசியல் செய்து வாக்களித்த மக்களை துச்சமாக மதித்து புதுச்சேரியை சிதிலமாக மாற்றி உள்ளார். தொழில் வளர்ச்சி முடங்கி உள்ளது. புதுச்சேரி சுபீட்சமாக இல்லை. மின்கட்டண உயர்வு போக்குவரத்து பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, விலைவாசி உயர்வு என தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் கிடப்பில் உள்ளது. சிங்கப்பூர் போல இருக்க வேண்டிய புதுச்சேரி தற்போது முடக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலைக்கூட ரங்கசாமி கொண்டு வரவில்லை. எல்லா நிறுவனங்களும் சென்று விட்டன. பாசிக், பாப்ஸ்கோ என அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. 21 கார்ப்பரேஷனில் வேலைக்கு வைத்து பல குடும்பங்கள் நடுத்தெருவில் உள்ளன. இதில் பலர் தற்கொலை செய்துள்ளனர். இதுபற்றி தேர்தலுக்கு முன்பு வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். தனக்கு தேவைப்படும் நேரத்திலோ பிரச்சினை ஏற்படும் போதோ மாநில அந்தஸ்தை ரங்கசாமி கையில் எடுப்பார். அவருக்கு வேண்டியவர்கள் பந்த் அறிவிப்பார்கள். அரசும் ஆதரவும் கொடுக்கும். ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது. மக்கள் பிரச்சினையை விவாதிக்காமல் சட்டசபையை கூட 4 நாட்கள் மட்டுமே நடத்துகிறார்கள். பிரச்சினையை எடுத்து சொல்ல நாங்கள் இருக்கிறோம். போராட்டங்களுக்காக 57 முறை சிறை சென்றவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம். தட்டாஞ்சாவடி யாருடைய தனி சொத்தும் இல்லை. கடந்த முறை ரங்கசாமி வாங்கிய வாக்குகளை விட எதிராக வாங்கிய வாக்குகள் அதிகம். கடந்த முறை வாக்களித்து வென்ற பிறகும் நன்றி சொல்லக்கூட ரங்கசாமி வரவில்லை. இடைதேர்தலில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என சிவா பேசினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.