Times of Puducherry

திமுக வேட்பாளர் சேது செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 3:29 PM

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வம், தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை அருகில் புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., திமுக அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திராவிடர் கழகம், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலின்போது, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல்.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்‌கள் செந்தில்குமார், விக்னேஷ் கண்ணன், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் லட்சுமணன் எம்எல்ஏ, வானூர் தொகுதி எம்எல்ஏ கௌதம் திராவிட மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ.மூர்த்தி,

நந்தா.டி.சரவணன் மற்றும் மாநில கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கழக கொள்கை பரப்புச் செயலாளரும் புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளருமான

எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதாகவும் அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார். தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றியின் மூலம் புதுச்சேரியில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தர திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்தார். தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுடன் தான் திமுக கூட்டணி. காங்கிரசுடன் தவெக கூட்டணி சேர்ந்திருப்பது திமுகவிற்கு சாதகமாக இருக்கிறது. தட்டாஞ்சாவடியில் உள்ள 26 ஆயிரம் வாக்காளர்களுடன் தான் கூட்டணி. இதை விட பெரிய கூட்டணி தேவையா?. மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் திமுகவிற்கு மக்கள் அமோக ஆதரவு தருகின்றனர். எதிரணியினரை எதற்கு ராஜினாமா செய்தீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவது புதிதல்ல, வழக்காமானதுதான், திமுக பார்க்காதது அல்ல, எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. பல சோதனைகளை பார்த்து விட்டோம். மிசாவையை பார்த்து விட்டோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி., திமுக அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் தலைமையில், திமுகவினர் வீதி வீதியாக சென்று வேட்பாளர் சேது செல்வத்திற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top