Times of Puducherry

தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல்: வீடு, வீடாக வாக்கு சேகரிக்கும் தி.மு.க வேட்பாளர்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 7:17 AM
dmk campaign

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வம் நேற்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்த வேட்பாளர் சேது செல்வம் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மாநில அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் தலைமையில் தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் டாக்டர் இலட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொன். கெளதமசிகாமணி மற்றும் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய கழகச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பாக்குமுடையான்பேட் பூத் ஏர்போர்ட் சாலை, வன்னியர் வீதி ஆகிய பகுதியில் திமுக அமைப்பாளர் இரா. சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொன் கெளதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் திமுக வேட்பாளர் சேது செல்வம் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது, தட்டாஞ்சாவடி தொகுதி திமுக பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ் மற்றும் புதுச்சேரி, விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, தொகுதி, சார்பு அணி, நகரம், பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top