Times of Puducherry

விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 6:32 PM
devotion

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பண்ருட்டி விஸ்வகர்மா பொன் – வெள்ளி ஆபரண தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் விஸ்வகர்மா பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. விழா நிறைவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பண்ருட்டி விஸ்வகர்மா பொன் – வெள்ளி ஆபரண தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top