Times of Puducherry

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவல் இல்லை - முதலமைச்சர் ரங்கசாமி

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 5:01 PM
dengue-pondy-cm

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், மற்றும் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், வீடுகள் மற்றும் வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் நன்னீர்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் குறைவாகத்தான் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளாட்சித் துறை பொதுப்பணித்துறை சுகாதாரத்துறை உள்ளாட்சித் துறை அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கின்றேன். வீடுகள் வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் நன்னீர்களை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவளித்துள்ளேன் என தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top