Times of Puducherry
டெல்லியில் இருந்து தேர்தல் அதிகாரிகள் புதுச்சேரி வந்தனர் இது தொடர்பாக இன்று நடந்த கூட்டத்தில். தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நடைமுறைக்கு வந்துள்ள தேர்தல் கண்காணிப்பாளர் G.S. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கண்காணித்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.சுதந்திரமான வாக்கு பதிவு தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் அதிகாரி என்று தெரிவித்தார்
இந்நிலையில், கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்தினார். அப்போது அவர், நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தைவிதிமுறைகள் தேர்தல் செலவினக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் வரம்புகளுக்கு உட்பட்டு, தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு, நியாயமான முறையில் தேர்தலில் போட்டியிடுமாறு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பண விநியோகம், மதுபானம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வாக்காளர்களை எந்தவிதமான முறையற்ற தாக்கத்திற்கும் உட்படுத்தாமல், முற்றிலும் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்துவதன் மூலம் தட்டாஞ்சாவடி முன்னுதாரணமாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் நடத்தும் பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக, தேர்தல் செயல்முறை முழுமையாக நிறைவடையும் வரை புதுச்சேரியில் தங்கியிருப்பேன் என்றும் பொதுப் பார்வையாளர் அவர்கள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.