Times of Puducherry
விக்கிரவாண்டி பகுதியில் உள்ள நல்லதண்ணிகுளம் வீரன் கோயில் ஏரிக்கரையில், குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக மாவட்ட குழந்தைகள் அவசர உதவி அலகு (Child Helpline–1098)-க்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமை காவலர் திரிபுரசுந்தரி காவலர் தீபா காவலர் ஆனந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் எட்டு வயது பெண் குழந்தை ஆறு மற்றும் ஏழு வயது ஆண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்வதாக அறியப்பட்டது மேலும் அந்த குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் போதிய பராமரிப்பு இன்றி இருப்பது தெரியவந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பிய பெற்றோரிடம் பேசி அந்தக் குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு குழந்தைகள் நலக் குழுமத்திடம் (CWC) பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.