Times of Puducherry
கடலூர் துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்றங்கரை பகுதிகளில், காவல் துணைக் கண்காணிப்பாளர் . தமிழ் இனியன் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு மாலை நேர கால்நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
இக்கால்நடை ரோந்தின்போது, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பொது இடங்களில் மது அருந்துதல், சட்டவிரோத செயல்கள் மற்றும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் காவல்துறையின் தொடர் கண்காணிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இம்மாலை நேர கால்நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.