Times of Puducherry
லஞ்சம், ஊழல் முறைகேடுகள் நிறைந்த பிஜேபி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்து ஒரு மாற்றம் வர வேண்டும்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். தட்டஞ்சாவடி இடைத்தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்து உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் அத்தகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தொகுதியில் அவர் ஒரு நாள் கூட எட்டிப் பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார். தட்டாஞ்சாவடி தொகுதியில் நல்ல சட்டமன்ற உறுப்பினர் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த தொகுதி மக்கள் விருப்பம். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்த மாநில செயலாளர் சலீம் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்து சிறை தண்டனை பெற்றவர். மீண்டும் அவரையே வேட்பாளராக அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.
புதிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தை கேட்டுள்ளோம். அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவின் சக்கரவர்த்தி ஆகியோரை சந்தித்து கடிதங்கள் கொடுத்து ஆதரவு கோரி உள்ளதாக தெரிவித்தார். புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் பிஜேபி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து மக்கள் திட்டங்களை செயல்படுத்தவில்லை, அதற்கு மாறாக லஞ்சம், ஊழல் முறைகேடுகள், நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்ந்துள்ளது அதில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிலைபாடு. அந்த மாற்றம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இருந்து தொடங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். இடைத்தேர்தல் என்றால் அதிக அளவில் பணத்தை செலவழிப்பார்கள் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு சமாளிக்கும் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள், கேரளா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மக்கள் பணத்துக்காக வாக்களிக்கவில்லை, ஆம் ஆத்மி கட்சிக்கும் மக்கள் பணத்துக்காக வாக்களிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.