Times of Puducherry
கடலூர் பிரிவு கடலோர பாதுகாப்புக்குழுமம் சார்பில் தமிழக மீனவ இளைஞர்களுக்கான 5-வது திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில்:
மீனவ இளைஞர்களின் திறனை மேம்படுத்த உதவும் 3 மாத கால இலவச அடிப்படை பயிற்சி ஆகும். இப்பயிற்சியில் சேர்ந்து இளைஞர்கள் மேலும் திறன்களை வளர்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று அரசு பணியில் சேர்வதற்கு விடாமுயற்சி, கடின உழைப்புடன் வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்து, குறிக்கோளை மட்டுமே மனதில் நிறுத்தி போட்டி தேர்வுகளில் பயிற்சியில் பங்குபெறும் அனைவருமே வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி பேசினார்கள்.
இந்நிகழ்வில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யா லெட்சுமி, தமிழ்நாடு கடற்படை NCC லெப்டினன்ட் கமாண்டர், டேவிட் தாமஸ், கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் ஆய்வாளர் அம்பேத்கார், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜவ்வாது உசேன், கடலோர பாதுகாப்பு குழுமம் உதவி ஆய்வாளர் திரு. பிரபாகரன் மற்றும் பயிற்சியாளர்களும் பங்கேற்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.