Times of Puducherry

காங்கிரஸ் என்றாலே முதுகில் குத்துகிற, ஓடும் குதிரையில் இருந்து இன்னொரு குதிரைக்கு தாவும் கட்சி: அ.தி.மு.க அன்பழகன் விமர்சனம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 7:10 AM
ANBALAGAN

அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து தட்டாஞ்சாவடி தொகுதி அதிமுக செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் தொகுதி செயலாளர் எம்.கமல் தாஸ் தலைமையில் புதுச்சேரி இ.சி.ஆர். சாலையில் உள்ள பாண்டி சதர்ன் ரெசிடென்சியில் (Pondy Southern Residency) நடைபெற்றது.

இதில் மாநில இணைச் செயலாளர் ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில துணைச் செயலாளர் எம். நாகமணி, உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ். சித்தானந்தம், மாநில மகளிர் அணி செயலாளர் விமலாஸ்ரீ, பொதுக்குழு உறுப்பினர் அன்புமுருகன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசியதாவது:

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் ரங்கசாமி ஆசிபெற்ற வேட்பாளராக என்.ஆர்.காங்கிரஸ் சர்பில் முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் எம்.எல்.ஏவாக இருந்த போதும், இல்லாத காலங்களிலும் கடந்த 20 வருடங்களாக தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து மக்களுக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த முறை நமது கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது நமது கடமையாகும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசும், திமுகவும் கூட்டணி அமைத்து ஒன்றாக பொட்டியிட்ட போதே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாபெரும் தலைவர் டெபாசிட் கூட வாங்கவில்லை. தற்போத இரண்டு கட்சிகளும் தனித்தனியாக பிரிந்த நிற்கின்றனர். திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்குவதற்காக வேட்பாளரக்ளை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாடகை

டெப்பாசிட் வாங்க முடியாத நிலையில் உள்ள அவர்கள் இரண்டாம் இடத்திற்காக தற்போது போட்டிபோடுகின்றனர். அவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நமது பணி என்பது எந்த சுணக்கமம் இல்லாமல் அசோக் ஆனந்த் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும். அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் என்.ஆர். வேட்பாளர் வெற்றிக்கு அயராது உழக்ைக வேண்டும். அசோக் அனந்த வெற்றி என்பது என்.ஆர் கரத்தை சட்டமன்றத்தில் மேலும் வலுப்படுத்தும் வெற்றி ஆகும். என்.ஆர். நல்லாட்சிக்கு இந்த வெற்றி மூலம் நாம் வழங்கும் அங்கீகாரமாகும்.

காங்கிரஸ் என்றாலே முதுகில் குத்துகிற கட்சி. ஓடும் குதிரையில் இருந்து இன்னொரு குதிரைக்கு தாவும் கட்சிதான் காங்கிரஸ் கட்சி. 100 ஆண்டு காலம் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி இப்பொழுது யாரை முன்னிருத்தி ஒட்டு கேட்கிறார்கள் என்று மக்கள் உணர வேண்டும்.

முன்பெல்லாம் முதலமைச்சர் ரங்கசாமி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் தட்டாஞ்சாவடிக்கே செய்கிறார் என கூறிய திமுக. இப்போது 20 ஆண்டுகாலம் தட்டாஞ்சாவடி வளர்ச்சியில் பின்னுக்கு தள்ளிவிட்டார் என சிவா கூறுகிறார். 15 நாட்களில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரவிக்குமாரிடம் வெற்றியை இழந்தவருக்கு முதல்வரை பற்றி விமர்சனம் செய்ய என்ன உரிமை இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக நல்ல எதிர்கட்சியாக செயல்படும் என சிவா கூறுகிறார். இவர் எதிர்கட்சி தலைவராக இருந்த போதே உண்மையில் திமுக எதிர்கட்சியாக செயல்பட்டதா? தற்போது உள்ள திமுக சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காக எதிர்கட்சியாக செயல்படுகிறதா? இந்த நிலையில் திமுக வெற்றி பெற்று என்ன ஆக போகிறது. திமுக காங்கிரஸ் கட்சியில் இந்த தேர்தலில் போட்டியிட எந்த ஒரு தொண்டனுக்கும் தகுதி இல்லையா? அல்லது எந்த தொண்டனுக்கும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என நினைத்து இவ்விரண்டு தலைமையும் வாடகைக்கு ஆள் பிடித்தள்ளனரா. ? சந்தர்ப்பவாத திமுக, காங்கிரஸ் ஆகிய இந்த இரண்டு கட்சிகளுக்கும் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். அசோக் ஆனந்த் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட வெற்றி என்ற நிலையிலும், நாம் அவரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும்.

எத்தனையோ இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமை சேர்க்கின்ற விதத்தில் நம்முடைய முதலமைச்சர் என்.ஆர் என்னை சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக அறிவித்துள்ளார். இது நமது கட்சிக்கு பெருமை சேர்க்க கூடிய விஷயமாகும். இதை மனதில் கொண்டு கழகத் தொண்டர்கள் அனைவரும் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top