Times of Puducherry
புதுச்சேரி வாக்கு என்னும் மையத்தை தேர்தல் அதிகாரியும் கலெக்டர்மான குலோத்துங்கன் பார்வையிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வரும் 06.10.2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கும், தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கும் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி, புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தேர்தல் துறை அதிகாரிகளுடன் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.