Times of Puducherry
தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்டவராகப் போற்றப்படும் விநாயகப் பெருமானைத் தொழுது, புதிய செயல்களைத்
தொடங்கி மக்களுக்கு வெற்றி கிட்டட்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார் இதுகுறித்து முதல்வரின் அலுவலக செய்தி குறிப்பில் விநாயகர் சதுர்த்தி திருநாளானது, சிறப்பை உணர்த்தும் திருநாளாகும். புதிய தொடக்கங்களின் பெருமைமிக்க மணக்குளவிநாயகர் அருள்பாலிக்கும் புண்ணிய பூமியான புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ஆன்மீக உணர்வோடும், பெருமகிழ்ச்சியோடும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாம் மேற்கொள்ளும் நற்காரியங்கள் அனைத்தும் தடைகளின்றி விரைந்து வெற்றி பெற விநாயகப் பெருமானின் பரிபூரண அருள் எப்போதும் நமக்குத் துணை நிற்கட்டும்.
புதிய தொடக்கங்களின் சிறப்பை உணர்த்தும் இந்தத் திருநாள் அனைவரது இல்லத்திலும் மனநிறைவையும் கொண்டுவருவதோடு, நம் சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வழிவகுப்பதாக அமையட்டும் நமது மாநிலத்தின் நலனையும் வளர்ச்சியையும் முன்னிறுத்தி, மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க இத்திருநாள் புதிய நம்பிக்கையை அளிக்கட்டும்.
மகிழ்ச்சியையும், ஒவ்வொருவரது வாழ்விலும் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் நிறைந்திட வேண்டும் என வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.