Times of Puducherry

அசோக் ஆனந்திற்காக களமிறங்கிய ரங்கசாமி; புதுச்சேரி தேர்தலில் திடீர் விறுவிறுப்பு... முதலமைச்சரின் மாஸ் என்ட்ரி

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 7:22 AM
cm campaign

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக் ஆனந்த்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். புதுப்பேட்டை புத்துளாய் அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சார வாகனத்தில் நின்று கூடியிருந்த மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். நடைபெற உள்ள இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல், ஆளும் அரசுக்கு மேலும் வலு சேர்க்கக்கூடிய ஒரு தேர்தல் என்று குறிப்பிட்டார்.

தொகுதியில் வேட்பாளர் அசோக் ஆனந்த் காணாமல் போய்விட்டார் என்று கூறினார்கள், அவர் காணாமல் போகவில்லை, யார் காணாமல் போய்விட்டார் என்று கூறினார்களோ அவர்கள் தான் காணாமல் போய்விட்டார்கள் என்றார். மேலும் பேசிய அவர், மத்திய அரசு உதவியுடன் புதுச்சேரி மாநிலத்தை சிறந்த மாநிலமாக கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் அவர் சிறப்பாக பணியாற்றுவதற்கு என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஜக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

எதிரணியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள், நாம் கேட்பதெல்லாம் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். ஏனென்றால் இவர்கள் வெற்றி பெற்று எந்த திட்டங்களையும் நிறைவேற்றப் போவதில்லை எனவே அவர்களுக்கு வாக்களிப்பது என்பது தேவையில்லாத ஒன்று.

தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது இந்த இடைத்தேர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒரு இடைத்தேர்தல் இதில் வெற்றி பெற்றால் மேலும் நமது ஆட்சிக்கு வலு சேர்ப்பதாக அமையும் எனவே காங்கிரஸ் திமுக வேட்பாளர்களை புறந்தள்ளிவிட்டு என் ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என ரங்கசாமி கேட்டுக்கொண்டார். நமது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top