Times of Puducherry

பட்டினப்பாக்கத்தில் குவிந்த 100 மெட்ரிக் டன் கழிவுகள்: தூய்மைப் பணி தீவிரம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 1:19 PM
Chennai pattinapakkam vinayagar idol immersion sanitation workers removing waste

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் டன் கணக்கில் ஒதுங்கிய சிலைகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 14 ஆம் தேதி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில், இந்தப் பண்டிகைக்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் வெளிகளில் கரைக்கப்பட்டன. அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் நேற்று ஞாயிற்று கிழமை கரைக்கப்பட்டன.

சென்னை பெருநகரத்தில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ன. சென்னையில் மட்டும் மொத்தமாக நான்கு கடற்கரை பகுதிகளில் ஆறு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் பகுதியில் மட்டும் 1,241 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே தூய்மைப் பணியாளர்கள் விநாயகர் சிலைகளில் இருந்து உடைந்த எஞ்சிய பாகங்கள் மற்றும் கழிவுகளை துரிதமாக அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டினப்பாக்கம் கடற்கரையில் 80-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபாட்டு வருகிறார்கள். 2 கிரேன்கள், 3 பொக்லைன், 3 டிராக்டர்கள், 3 ஜே.சி.பி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 டிப்பர்கள், 3 மணல் சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் மூலம் காலை முதல் 120 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

மேலும், விநாயகர் சிலைகள் கரைப்பால் இதுவரை 929.65 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த 19ம் தேதியில் இருந்து நேற்று வரை 4 கடற்கரையிலும் குவிந்த திடக்கழிவுகள் அகற்றப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top