Times of Puducherry

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: 9 கிராம மீனவர்கள் இன்று ஆலோசனை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
15 Sep 2026 • 7:22 AM
Chennai pattinapakkam new secretariat 9 village fishermen discuss

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து 9 மீனவ கிராம பிரதிநிதிகள் இன்று (செப்.15) ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க முள்ளிக்குப்பம்- சீனிவாசபுரம் மற்றும் முள்ளிமாநகர் மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் பட்டினப்பாக்கம் முள்ளிக்குப்பம் சமூக நலக் கூடம் எதிரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நைனார்குப்பம் வரையுள்ள அனைத்து மீனவக் கிராம நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். 9 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் இந்த அரசாணையைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என மீனவ சங்க வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top