Times of Puducherry
புதுச்சேரியில் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கானமுதல் சுற்று கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் மற்றும் காலியாக உள்ள இடங்கள் விவரம் சென்டாக் இணையதளத்தில் https://www.centacpuducherry.in வெளியிடபட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்கள், எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வருகிற 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்பபாடங்களை தேர்வு செய்து சமர்பிக்க வேண்டும். மேலும் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இளநிலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்டாக் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.