Times of Puducherry

தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 7:19 AM
candidates property details

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 14 வேட்பாளர்கள் 15 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவருக்கு அசையும் சொத்து ரூ.120 கோடி, அசையா சொத்து ரூ.187 கோடி, மரபு வழியாக வந்த அசையா சொத்து ரூ.37.2 கோடி என மொத்தம் ரூ.344 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளதாகவும், கடன் ரூ.129.66 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவியிடம் அசையும் சொத்து ரூ.2.98 கோடியும், அசையா சொத்து ரூ.2.62 கோடியும் உள்ளது.

இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்துக்கு அசையும் சொத்து ரூ.90.57 லட்சமும், அசையா சொத்து ரூ.8.51 கோடியும் உள்ளது.

தி.மு.க.வேட்பாளர் சேது செல்வத்துக்கு அசையும் சொத்து ரூ.5 லட்சமும், அவரது மனைவியிடம் ரூ.12.55 லட்சமும் உள்ளது. அசையா சொத்து இல்லை.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சலீமுக்கு அசையும் சொத்து ரூ.27.67 லட்சமும், அசையா சொத்து ரூ.1.65 கோடியும் உள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்தி குமாரிக்கு அசையும் சொத்து ரூ.17.46 லட்சமும், அசையா சொத்து ரூ.20 லட்சமும் உள்ளது. கடன் ரூ.4.5 லட்சம் உ ள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top