Times of Puducherry

ஜக்கு சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீடு வீடாக சென்ற அசோக் ஆனந்தன்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 5:20 PM
campaign

தட்டாஞ்சாவடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் அசோக் ஆனந்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை மாரியம்மன் தெரு பகுதியில் அசோக் ஆனந்தன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களையும், வாக்காளர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அப்பகுதி மக்களிடம் தனது தேர்தல் சின்னமான “ஜக்கு” சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அசோக் ஆனந்தன் கேட்டுக்கொண்டார். மேலும், தொகுதியின் வளர்ச்சி, பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப் பணிகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார்.

அசோக் ஆனந்தன் தங்களது வீடுகளுக்கே நேரில் வந்து சந்தித்ததை அறிந்த பொதுமக்கள், அவரை அன்புடன் வரவேற்று கலந்துரையாடினர். பலர் தங்களது பகுதியில் நிலவும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் தெரிவித்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top