Times of Puducherry

இடைத் தேர்தலில் புதுச்சேரி அரசின் தோல்வி எதிரொலிக்கும்: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் பேட்டி

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:42 AM
campaign

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியன் வேட்பாளராக போட்டியிடும் விநாயகத்தை அறிமுகப்படுத்தும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே தனியார் ஹாலில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலரும், புதுச்சேரி பொறுப்பாளருமான குலாம் அகமது மிர், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள், தவெக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில முதன்மை செயலாளர் அரிமா தமிழன், மதிமுக ஹேமா பாண்டுரங்கன், நேயம் மக்கள் கழகம் தலைவர் நேரு எம்எல்ஏ மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் குலோம் அகமது மிர் செய்தியாளர்களை சந்தித்தார். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் விநாயகத்தைப் பொது வேட்பாளராக எங்கள் கூட்டணி கட்சிகள் அங்கீகரித்துள்ளன. புதுச்சேரி அரசின் தோல்வி மற்றும் கொள்கை முடிவுகளுக்கு எதிராக முதன் முறையாக இந்தக் கூட்டணி கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. அதனால் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் விநாயகம் வெற்றி பெறுவார். தேர்தல் பிரசார குழுதான் பிரசார உத்தியை வகுக்கும். பொதுவாக இடைத்தேர்தலில் தேசிய தலைவர்களின் பிரசாரம் இருக்காது.
உள்ளூர் தலைவர்களின் பிரசாரம்தான் இடம் பெறும். இருப்பினும் தேசிய தலைவர்கள் வருவார்களா, மாட்டார்களா என்று சொல்வதற்கு இல்லை. இந்த இடைத்தேர்தலில் புதுச்சேரி அரசின் தோல்வி எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top