Times of Puducherry

இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை: புதுச்சேரியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:41 AM
bridge

இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரையிலான மேம்பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சாலை/நிலம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் அவர்கள் ஒப்படைத்தார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு 13-அக்டோபர் அன்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை இணைக்கும் மேம்பாலம் நிர்மாணிக்கும் திட்டத்தை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) அனுமதித்துள்ளது. இந்திரா காந்தி சதுரத்தை ராஜீவ் காந்தி சதுக்கத்துடன் இணைக்கும் மொத்தம் 3.877 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் நிர்மாணிக்க 436.18 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மேம்பாலம் இந்திரா காந்தி சதுக்கத்திற்கு தெற்கே 430 மீட்டர் தொலைவில் தொடங்கி வடக்கு நோக்கி செல்கிறது மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கத்திலிருந்து 620 மீட்டர் வடக்கே ECR சாலையில் இறங்குகிறது. இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 1150 மீட்டர் நீளம் மற்றும் 21.5 மீ அகலம் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்திரா காந்தி சதுக்கத்தில் உயர்நிலை வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து கிழக்கில் அமைந்துள்ள பேருந்து நிலையம் வரை 853 மீட்டர் நீளமும் 9 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலம் இணைப்பு அமைக்கப்பட உள்ளது.
இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து மற்றொரு மேம்பால இணைப்பு விழுப்புரம் நோக்கி 300மீ நீளத்திற்கும் 9மீ அகலத்திற்கும் அமைக்கப்பட உள்ளது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி 524 மீட்டர் நீளம் மற்றும் 17.50 மீ அகலத்திற்கு மேம்பாலம் இணைப்பு அமைக்கப்பட உள்ளது. T &T Infra Limited –LEAD MEMEBER & Dhariwal Buildtech Limited – JOINT VENTURE ஆகிய நிறுவனங்கள் மேம்பாலம் கட்டுமானப்பணிகளுக்கான டெண்டரை எடுத்துள்ளது. கட்டுமானப்பணிகளுக்கான செயல்பட்டுகள் குறித்து பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற் பொறியாளர் ஸ்ரீநிவாசராம், உதவி பொறியாளர் சிவப்பிரகாசம் மற்றும் இளநிலை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்களிடம் கட்டுமான (Sight Handing Over) பணிகளுக்கான இடங்களை ஒப்படைத்தனர். ‎

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top