Times of Puducherry

தடை செய்யப்பட்ட 386 கிலோ புகையிலை பறிமுதல்: 5 பேரை கைது செய்த புதுச்சேரி போலீஸ்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
11 Sep 2026 • 7:51 PM

புதுச்சேரி கரசூரில் தடை செய்யப்பட்ட 386 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி சேதராப்பட்டு காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் பேரில், ஊசுடு தொகுதிக்குட்பட்ட கரசூர் மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டில் சேதராப்பட்டு போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை குழுவினர் நடத்திய சோதனையில், ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள 386 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் வானூர் பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் (29), வானூர் பச்சைவாழியம்மன் நகரைச் சேர்ந்த முகமது யூசுப் (36), கரசூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கந்தசாமி (75), மொரட்டாண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கணேசன் (48), வளவனூர் பஞ்சாயத்து குவார்ட்டர்ஸ் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (28) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top