Times of Puducherry

தூய ஆவியார் ஆலய சிறப்பு பிரார்த்தனையில் அசோக் ஆனந்தன் பங்கேற்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
13 Sep 2026 • 2:50 PM

தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட தாகூர் நகர் பகுதியில் அமைந்துள்ள தூய ஆவியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில், தட்டாஞ்சாவடி தொகுதியின் வெற்றி வேட்பாளர் அசோக் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். தொடர்ந்து ஆலயத்தின் பங்குத்தந்தை கில்பர்ட் மற்றும் உதவி பங்குத்தந்தை தேவ அன்பு ஆகியோரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது தொகுதி மக்களின் நலன், ஒற்றுமை மற்றும் அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினருடன் தொடர்ந்து நல்லுறவை பேணி, அனைவரின் ஆதரவுடனும் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என அசோக் ஆனந்தன் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top