Times of Puducherry
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஒதியஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து, சட்டமன்ற உறுப்பினர் அழகானந்தம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர்களை தொடர்ந்து அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல் திமுகவினர், மதிமுகவினர், திகவினர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.