Times of Puducherry

ரீல்ஸ்காகவும் சினிமா மோகத்திற்காகவும் வாக்களிக்கக்கூடியவர்கள் புதுச்சேரி மக்கள் இல்லை - அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
20 Sep 2026 • 11:11 PM
ANBALAGAN

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக் அசோக் ஆனந்த் அறிமுகம் மற்றும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. அதிமுக மாநில செயலாளரும் தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறுகையில்:

இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போலியான வாக்குறுதிகளை கொடுத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர், மாநில அந்தஸ்து குறித்து பேசுவதற்கு திமுக மற்றும் காங்கிரஸுக்கு அருகதை இல்லை என்றும் இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் நடந்து முடிந்த தேர்தலில் டெபாசிட்டை இழந்தார் என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்ய வருகிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்பழகன்:

தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சாரத்திற்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் அவர் என்ன வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை சேகரிக்க உள்ளார் என்பதனை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தமிழகம் போன்று ரீல்ஸ்காகவும் சினிமா மோகத்திற்காகவும் வாக்களிக்கக்கூடிய மக்கள் புதுச்சேரியில் இல்லை இங்கு காலங்காலமாக உண்மையான அரசியல் கட்சிக்கு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் பதில் அளித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top