Times of Puducherry

பிரபல ரவுடி ஆனந்த் கொலை: தலைமறைவான 5 பேர் கைது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 7:06 AM
ANAND MURDER

புதுவை லாஸ்பேட்டை ஈசிஆர் சாலையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஆனந்த் 8 பேர் கும்பலால் நடுரோட்டில் ரவுடி ஆனந்த் செய்யப்பட்டார். இந்த கொலையில் ரௌடி ஜெகனின் கூட்டாளியான கருவடிக்குப்பம் சந்துரு, அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய், ராஜ்கமல், நாகராஜ், சந்தோஷ் ஆகிய ஐந்து பேரை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்தனர். இதில் ரவுடி சந்துரு கூட்டாளி சஞ்சய் ஆகியோர் கை முறிவு ஏற்பட்டு இரண்டு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் குற்றவாளிகள் ஐந்து பேரும் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த கொலையில் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், சிவகங்கை சேர்ந்த அஜித், காரனேஸ்வரன் ஐய்யா மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top