Times of Puducherry
சிதம்பரம் அருகேயுள்ள சி.கொத்தங்குடியில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதுடன், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டையும் உடைத்து தூரத்தில் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடியில் நுழைவு பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வந்து வந்த மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையை செங்கற்களால் குத்தி சேதப்படுத்தி உள்ளனர். சிலையில் உள்ள மூக்கு கண்ணாடியையும் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் சிலைக்கு பாதுகாப்பாக போடப்பட்டிருந்த இரும்பு கூண்டையும் உடைத்து ச தூரத்தில் தூக்கி எறிந்துள்ளனர்.
இதனை இன்று காலை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் கிராமத்தில் ஏராளமானோர் திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாமலை நகர் போலீசார் பதற்றத்தை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சி.கொத்தங்குடி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.