Times of Puducherry
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை, கல்வே பங்களா மெயின் வீதி, எண்: 74 என்ற விலாசத்தில் வசிக்கும் சிவக்குமார் என்பவரின் மகன் மனோஜ் கனடா நாட்டில் HARV’S AIR என்ற விமான பயிற்சி நிறுவனத்தில் விமானியாக பயிற்சி பெற்றுவந்தார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக படித்து விமானியாக விமானம் ஓட்டி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் ஓட்டிய Cessna 172 விமானத்தில் அவரது சக மாணவரான சென்னையை சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவரின் மகன் ஸ்ரீசரண் என்பவரும் விமானம் ஓட்டி பழகும் போது கனடா நாட்டின் ரெஜினா மாவட்டம் (Saskatchewan)சஸ்காச்சுவானில், Kisbey என்ற பகுதியில் அவர்கள் ஓட்டிய விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்து இருக்கிறார்கள்.
இவரது உடலை கனடா நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு கொண்டுவந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க ஆவண செய்யுமாறு உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA கோரிக்கை கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் கொடுத்தார். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.