Times of Puducherry
கனடாவில் விமானப் பயிற்சிப் பெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கோர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீதரன் திருஞானசம்பந்தம் ஆகிய இரண்டு இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் செய்தி அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் விமானப் பயிற்சி பெறுவதற்காகச் சென்றிருந்த இந்த இரு மாணவர்களும், வழக்கமான பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
வேன்குவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் (Consulate General of India) இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில், கனடாவில் விமானப் பயிற்சியின் போது நேர்ந்த கோர விபத்தில் திரு. மனோஜ் சிவகுமார் மற்றும் ஸ்ரீதரன் திருஞானசம்பந்தம் ஆகியோர் உயிரிழந்தமைக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான (Repatriation) அனைத்துத் தூதரக உதவிகளையும் செய்வதற்குத் தூதரகம் முழுமையாகத் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
விமானியாக வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று, எதிர்பாராத விபத்தில் உயிரை இழந்த இந்த இளம் மாணவர்களின் இழப்பு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.